» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கார் விபத்து : சவுரவ் கங்குலி உயிர் தப்பினார்!
வெள்ளி 21, பிப்ரவரி 2025 10:56:51 AM (IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கார் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. மேற்கு வங்காளத்தை சேர்ந்த அவர் நேற்று இரவு பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்றார். மேலும் சில கார்கள் அவரது காருடன் அணிவகுத்து சென்றன. ஹூக்ளி புறநகரில் தேசிய நெடுஞ்சாலையில் தாதுபூர் என்ற பகுதியில் சென்றபோது கங்குலி பயணித்த கார் விபத்தில் சிக்கியது.
வேகமாக வந்த லாரி ஒன்று கங்குலியின் கார் மீது மோதியது. இதனால் லாரி மீது மோதாமல் இருக்க கார் டிரைவர் பிரேக் போட்டார். இதில் கங்குலி காரை தொடர்ந்து வந்த 2 கார்களும் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கங்குலி காயமின்றி உயிர் தப்பினார். அதேபோல் மற்ற யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இந்த விபத்தில் கார்கள் மட்டுமே சேதமடைந்தது என்றும் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய கங்குலி, 20 நிமிடங்களில் வேறொரு காரில் புறப்பட்டு பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 65 தொகுதிகள்! அமித் ஷாவிடம் பட்டியல் வழங்கிய நயினார்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:02:00 PM (IST)

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)










