» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம் ஊழியர்களின் பணி நேரம் குறைப்பு: தெலுங்கானா அரசு அறிவிப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 11:23:45 AM (IST)
ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்க உள்ள நிலையில், தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தைக் குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தெலங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்தே முஸ்லிம்களுக்கு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது.இந்நிலையில், ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்க உள்ள நிலையில், முஸ்லிம்களுக்கு பணி நேரத்தைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து தொடங்கும் ரமலான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே வீடு திரும்பலாம் என்ற உத்தரவை தெலுங்கானா அரசு பிறப்பித்துள்ளது.
அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அவுட்சோர்சிங், வாரியம் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்குப் பொருந்தும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவசரநிலை ஏற்பட்டால் ஊழியர்கள் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்றும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா அரசின் இந்த அறிக்கையை அம்மாநில பா.ஜ.க. விமர்சித்து வருகிறது. தெலங்கானா அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் தந்திரம். நவராத்திரி விரதத்தின்போது இந்துக்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 65 தொகுதிகள்! அமித் ஷாவிடம் பட்டியல் வழங்கிய நயினார்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:02:00 PM (IST)

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)










