» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கண்ணாடியை உடைத்து காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில் ஏற முயன்ற வடமாநில பயணிகள்!

ஞாயிறு 16, பிப்ரவரி 2025 10:12:01 AM (IST)

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்ற சிறப்பு ரயில் கண்ணாடியை உடைத்து உள்ளே ஏற முயன்ற வடமாநில பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் மற்றும் காசி இடையிலான வரலாற்று தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் 3-ம் ஆண்டு நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் பனாரசுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.

இந்த ரயிலில் தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் உள்பட சுமார் 700 பேர் இருந்தனர். இந்த ரயில் மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே வந்த போது, முன்பதிவில்லாத டிக்கெட் வைத்திருந்த வடமாநில பயணிகள் சிலர் ரயிலில் ஏற முயன்றனர். சிறப்பு ரயில் என்பதால் பெட்டிகளின் கதவுகளை தமிழக பயணிகள் பூட்டி வைத்திருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த வடமாநில பயணிகள் ரயில் கதவில் உள்ள கண்ணாடியை உடைத்தனர். பின்னர் அதன் வழியாக கதவை திறந்து உள்ளே வர முயன்றனர். இதன் காரணமாக வெளியில் இருந்த பயணிகளுக்கும், உள்ளே இருந்த தமிழக பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


மக்கள் கருத்து

tamilanFeb 19, 2025 - 11:22:19 AM | Posted IP 162.1*****

railway police enna pannuthu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு

செவ்வாய் 18, மார்ச் 2025 5:33:56 PM (IST)

Sponsored Ads

CSC Computer Education




New Shape Tailors

Arputham Hospital





Thoothukudi Business Directory