» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம் ? உச்சநீதிமன்றம் கேள்வி
புதன் 12, பிப்ரவரி 2025 5:05:57 PM (IST)
அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்? என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம். வழக்கை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அப்போது, அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம் ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், போக்குவரத்துத் துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்பினால் அவருக்கு எதிரான வழக்கை மெரிட்டில் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த முறையே அதிருப்தியை தெரிவித்திருந்தோம், உரிய விளக்கம் அளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அரசு ஊழியர்கள் சாட்சிகளாக உள்ளதால் அவர்கள் பயப்பட வாய்ப்புள்ளது. 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருக்கும்போது, அமைச்சராக தொடர்ந்தால் என்னவாகும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா என தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையக் கூடாது: பிரதமருக்கு, ஜெகன் மோகன் கடிதம்
சனி 22, மார்ச் 2025 12:52:18 PM (IST)

செயலற்ற மொபைல் எண்களின் யுபிஐ சேவை ஏப். 1 முதல் நிறுத்தம்: என்பிசிஐ அறிவிப்பு!
சனி 22, மார்ச் 2025 12:11:56 PM (IST)

தங்கள் ஊழலை மறைக்கவே மொழி பிரச்சினையை கிளப்புகிறார்கள் : தி.மு.க. மீது அமித்ஷா தாக்கு
சனி 22, மார்ச் 2025 8:44:22 AM (IST)

உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது!
சனி 22, மார்ச் 2025 8:40:41 AM (IST)

சூதாட்ட செயலி விளம்பரம்: பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா உள்பட 25 பேர் மீது வழக்கு
வெள்ளி 21, மார்ச் 2025 11:37:12 AM (IST)

கொச்சி விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி கஞ்சா பறிமுதல்: மாடல் அழகி உள்பட 2 பெண்கள் கைது!
வியாழன் 20, மார்ச் 2025 7:44:02 PM (IST)
