» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!!
திங்கள் 10, பிப்ரவரி 2025 5:08:21 PM (IST)
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார் என்றும், இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை என்றும், அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்றும் குறிப்பிட்டு சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு முதலில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தது.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தீவிர கவலைக்குரியது என தெரிவித்திருந்தது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு மற்றொரு ரிட் மனுவையும் தாக்கல் செய்தது. அதில், தமிழக பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க ஆளுநர் வலியுறுத்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த வாரம் உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா பெஞ்ச் முன்பாக நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில், சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினால் என்ன காரணத்துக்காக அவை திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது என்கிற விவரம் சொல்லப்படுவது இல்லை என்றும், 2-வது முறையாக மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினால் அரசியல் சாசனப்படி அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும், ஆனால் ஆளுநரோ, இந்த மசோதாக்களை கிடப்பில் போடுவது அல்லது ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்பி வைப்பது என்கிற போக்குகளை கையாள்கிறார் என்றும், அரசியல் சாசன விதிகளுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்றும் வாதிடப்பட்டது.
இந்தநிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் சாசன பிரிவு 200 குறித்த விரிவான வாதங்களை ராகேஷ் திவேதி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தார். அதனைதொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இறுதியில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து அனைத்து தரப்பும் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம். ஆளுநர் தரப்பு வாதங்களை நிராகரிக்க வேண்டுமென தமிழக அரசு வாதம் வைத்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 65 தொகுதிகள்! அமித் ஷாவிடம் பட்டியல் வழங்கிய நயினார்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:02:00 PM (IST)

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)










