» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நாணயம் : மத்திய அரசு அனுமதி
புதன் 10, ஜூலை 2024 11:19:52 AM (IST)
முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்நாணயத்தை கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் கடந்த ஜூன் 3-ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது. இந்நிலையில் நேற்று நாணயத்திற்கான அனுமதி கோப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையொப்பம் இட்டதாகத் தெரிகிறது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதலமைச்சர் 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் 'தமிழ் வெல்லும்' என்ற வாசகம் இந்த நாணயத்தில் இடம் பெற உள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியாக உள்ளது. இதற்கான மாதிரி வடிவத்தை தமிழக அரசு வழங்கி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறப் போவதில்லை: தமிழக அரசு
வியாழன் 19, ஜூன் 2025 12:18:01 PM (IST)

ஆமதாபாத் விபத்து: ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு
வியாழன் 19, ஜூன் 2025 11:30:43 AM (IST)

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் ஏன்? தமிழக காவல்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன் 18, ஜூன் 2025 12:03:10 PM (IST)

இந்தியா- பாக்., மோதலில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்யவில்லை: பிரதமர் மோடி கருத்து
புதன் 18, ஜூன் 2025 11:55:34 AM (IST)

திருப்பதி விமான நிலையத்துக்கு ஏழுமலையான் பெயர் : அறங்காவலர் குழு பரிந்துரை
புதன் 18, ஜூன் 2025 11:13:52 AM (IST)

அம்பேத்கருக்கு அவமரியாதை: லாலுவுக்கு எஸ்சி ஆணையம் நோட்டீஸ்
செவ்வாய் 17, ஜூன் 2025 5:51:13 PM (IST)
