» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீட் தேர்வில் முறைகேடு: கைதான மாணவர் ஒப்புதல் வாக்குமூலம்!
வியாழன் 20, ஜூன் 2024 11:30:43 AM (IST)
நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் அனுராக் யாதவ் என்பவர், குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுராக் யாதவ் கையொப்பமிட்ட வாக்குமூல கடிதம் என்று இணையத்தில் பரவி வரும் கடிதத்தில், தேர்வுக்கு முந்தைய நாள் எனது மாமா மூலம் கிடைத்த வினாத்தாளும், தேர்வின் வினாத்தாளும் ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்.
மாணவர் அனுராக்கின் மாமாவான பிகார் டான்பூர் நகர அவையில் பொறியாளராக பணிபுரியும் சிக்கந்தர் பிரசாத் யாத்வேந்து மூலம் தான் தேர்வுக்கு முன்னதாகவே விடையுடன் வினாத்தாள் கிடைத்ததாக மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிகார் மாநிலம் பாட்னாவில் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பிகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் மாணவர்கள் சிலர் மற்றும் அவர்களின் பெற்றோர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டை தொடர்ந்து, தேர்வை ரத்து செய்யக் கோரி பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
முன்னதாக நீட் தேர்வெழுதிய 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்து கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தேசிய தேர்வு முகமை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமனம்: காங்கிரஸ் கண்டனம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 5:27:17 PM (IST)

டெல்லியில் கடுமையான நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின - பொதுமக்கள் அச்சம்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 11:01:28 AM (IST)

கண்ணாடியை உடைத்து காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில் ஏற முயன்ற வடமாநில பயணிகள்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 10:12:01 AM (IST)

கார்-பஸ் மோதிய விபத்தில் 10 பக்தர்கள் பலி: மகா கும்ப மேளாவுக்கு சென்றபோது சோகம்!
சனி 15, பிப்ரவரி 2025 5:18:38 PM (IST)

வாரணாசியில் 3வது தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி : பிரதமர் மோடி பெருமிதம்
சனி 15, பிப்ரவரி 2025 4:07:56 PM (IST)

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 17 ஆண்டுகளில் முதன் முறையாக ரூ.262 கோடி லாபம் ஈட்டி சாதனை!
சனி 15, பிப்ரவரி 2025 12:15:07 PM (IST)
