» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காவி நிறத்தில் தூர்தர்ஷன்: தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி.

ஞாயிறு 21, ஏப்ரல் 2024 8:43:08 PM (IST)

காவி நிறத்தில் தூர்தர்ஷன் லோகோ மாற்றப்பட்டதை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? என்று மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்சனின் இலச்சினையின் நீல நிறம் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.பாஜக அரசின் காவிமயமாக்கும் முயற்சி இது என பலரும் குரலெழுப்ப, இதனை "தங்களின் புதிய அவதாரம்..” எனக் குறிப்பிட்டுள்ளது தூர்தர்சன்.

இந்த நிலையில், தூர்தர்ஷன் இலச்சினை நிறம், ‘காவி நிறமாக’ மாற்றப்பட்டுள்ளதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ”தூர்தர்ஷன் லோகோவின் நிறத்தின் திடீர் காவிமயமாக்கம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் நேரத்தில், நம்முடைய தூர்தர்ஷன் லோகோவின் நிறம் மாற்றபபட்டிருப்பது அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்த நடவடிக்கை தார்மீகமற்றது, சட்டவிரோதமானது. இதன்மூலம், தேசிய அளவிலான பொது ஒளிபரப்பு நிறுவனம்(தூர்தர்ஷன்), பாஜகவுக்கு ஆதரவானதாக ஒருதலைபட்சமாக மாற்றப்பட்டுவதை மேற்கண்ட நடவடிக்கை உரக்கச் சொல்கிறது. மக்கள் தேர்தல் மீது கவனம் செலுத்தி வரும் சூழலில், இத்தகைய கொடூர காவிமயமாக்கலை, தேர்தல் நடத்தை விதிமீறலை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்?

தேர்தல் ஆணையம் உடனடியாக இதை நிறுத்த வேண்டும். நிறம் மாற்ற நடவடிக்கையை திரும்பப் பெறச் செய்து, தூர்தர்ஷன் லோகோவின் நிறம் ஏற்கெனவே இருந்தபடி நீல நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும்!” என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் மம்தா பானர்ஜி.


மக்கள் கருத்து

இவApr 22, 2024 - 09:43:41 AM | Posted IP 172.7*****

ஒரு பாகிஸ்தானி வங்காள தீவிரவாதி ஆதரவு பொம்பிளை, நல்லா கதறவும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory