» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காதலை ஏற்க மறுத்ததால் மகள் கொலை : காங்கிரஸ் தலைவர் விளக்கம்!

சனி 20, ஏப்ரல் 2024 4:11:48 PM (IST)

கல்லூரியில் குத்திக் கொலை செய்யப்பட்ட தனது மகளும், கொலையாளியும் வெறும் நண்பர்கள்தான் என்றும், காதலர்கள் இல்லை எனவும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் ஹிரெமத் விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூருவில் தனியார் கல்லூரியில் படித்து வந்த நேஹா என்ற 23 வயது மாணவியை, அதேக் கல்லூரியில் படித்து வந்த மூத்த மாணவர் ஃபயாஸ் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்த சம்பவத்தில் ஃபயாஸை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில், மாணவியின் தந்தை நிரஞ்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது மகள் மிகவும் தைரியமானவர் என்றும், அவர் கல்லூரியில் படிப்பதில்தான் கவனம் செலுத்தி வந்ததாகவும் அவருக்கு கொலையாளியுடன் காதல் எல்லாம் இல்லை என்றும் கூறியுள்ளார். 

மேலும், அவர்கள் நண்பர்களாகத்தான் பழகி வந்தனர், காதலர்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். நட்புடன் பழகி வந்த நிலையில், கொலையாளி காதலிப்பதாகக் கூறியதை, நேஹா மறுத்துவிட்டதாகவும் அந்த ஆத்திரத்தில் அவரை கொலையாளி குத்திக்கொலை செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory