» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிதி இல்லாததால் தேர்தலில் போட்டியிடவில்லை : நிர்மலா சீதாராமன் விளக்கம்!

வியாழன் 28, மார்ச் 2024 12:55:22 PM (IST)

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய சொந்த நிதி நெருக்கடி பிரச்சனை காரணமாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்ததாகத் தெரிவித்துள்ளார். 

டைம்ஸ் நவ் உச்சிமாநாடு 2024 இல், பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், என்னிடம் நாடாளுமன்ற தேர்தல் போட்டியிட கோரிக்கை வந்தபோது "ஒரு வாரம், 10 நாட்கள் யோசித்த பிறகு, நான் திரும்பிச் சென்று 'மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாது' என கூறினேன், மக்களவை தேர்தலில் போட்டியிட என்னிடம் அவ்வளவு பணம் இல்லை," என்றும்  கூறினார்.

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தனக்கு ஆந்திரா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிட வாய்ப்பு அளித்ததாகவும் தெரிவித்த அவர், பிஜேபி பயன்படுத்திய பல்வேறு வெற்றிக்கான அளவுகோல்கள் மற்றும் அந்த பாத்திரத்திற்கான அவரது பொருத்தம் குறித்து நிர்மலா சீதாராமன் கவலை தெரிவித்தார். "எனது சம்பளம், எனது வருமானம் மற்றும் எனது சேமிப்பு ஆகியவை என்னுடையது, இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியல்ல" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். 

கடந்த 10 வருட பிஜேபி ஆட்சியில் நிர்மலா சீதாராமன் ஒரு ஸ்டார் அமைச்சர் என்பதால் இவர் எங்குப் போட்டியிடுகிறார் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியிலும் இருந்தது. பியூஷ் கோயல், பூபேந்தர் யாதவ், ராஜீவ் சந்திரசேகர், மன்சுக் மாண்டவியா மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா போன்ற பிற ராஜ்யசபா உறுப்பினர்களை மக்களவைத் தேர்தலில் களமிறக்க பாஜக முடிவு எடுத்தது. நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார்.

மக்களவைத் தேர்தலில் நேரடியாக மக்களைச் சந்திக்க நிர்மலா சீதாராமன் விரும்பாவிட்டாலும், பிஜேபி-யின் மற்ற வேட்பாளர்களை ஆதரிப்பதில் தனது உறுதிப்பாட்டைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ராஜீவ் சந்திரசேகர் அவர்களுக்காக நிர்மலா சீதாராமன் பிரச்சாரம் செய்வதற்கும், ஊடக நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory