» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி: தொகுதிகள் ஒதுக்கீடு!!

புதன் 13, மார்ச் 2024 12:29:53 PM (IST)

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கூட்டணியில் பா.ஜனதா இணைந்தது. அந்த கட்சிக்கு 10 சட்டசபை தொகுதிகளும், 6 நாடாளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக உள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி மீண்டும், மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது.

கடந்த தேர்தலின்போது, பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. தேர்தலில் அந்த கட்சி தோல்வியடைந்தது. இந்த முறை தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன்கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் இருகட்சிகளும் தேர்தலில் இணைந்து செயல்பட முடிவு செய்தது.

கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில், மீண்டும் பா.ஜனதாவுடன் கைகோர்ப்பது என்று சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். இதற்காக பா.ஜனதாவுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்தநிலையில் டெல்லி சென்ற சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பா.ஜனதா-தெலுங்கு தேசம் கட்சிகளிடையே கூட்டணி உறுதியானது.

பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் பா.ஜனதா கட்சிக்கு 10 சட்டசபை தொகுதிகளும், 6 நாடாளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இதேபோல் ஜனசேனா கட்சிக்கு 21 சட்டசபை தொகுதிகளும், 2 நாடாளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 144 சட்டமன்ற தொகுதிகளிலும், 17 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் போட்டியிடுகிறது.

இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தள பதிவில், அமராவதியில், தெலுங்கு தேசம், பா.ஜனதா, ஜனசேனா ஆகியவை இணைந்து ஒரு வலிமையான தொகுதிப் பகிர்வு சூத்திரத்தை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியின் மீது ஆந்திர மக்கள் தங்கள் ஆசிகளைப் பொழிந்து, அவர்களுக்குச் சேவை செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையை எங்களுக்கு வழங்குமாறு அழைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory