» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உலக அழகி பட்டம் வென்றார் செக் குடியரசு நாட்டை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா

திங்கள் 11, மார்ச் 2024 8:25:12 AM (IST)



மும்பையில் நடந்த இறுதி போட்டியில் செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகி பட்டத்தை வென்றார். 

71-வது உலக அழகி போட்டி கடந்த மாதம் 18-ந் தேதி டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 117 அழகிகள் கலந்து கொண்டனர். இதன் இறுதி போட்டி நேற்று முன்தினம் இரவு மும்பையில் நடந்தது. மும்பை பி.கே.சி. பகுதியில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்சன் அரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடந்த இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் சினி ஷெட்டி உள்பட 14 அழகிகள் தகுதி பெற்று இருந்தனர்.

இறுதிப்போட்டியை இந்தி பட இயக்குனர் கரண் ஜோகர், முன்னாள் உலக அழகி மேகன் ஜங் தொகுத்து வழங்கினர். மிகவும் விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில் டிரினிடாட் அன்ட் டொபாகோ, செக் குடியரசு, போட்ஸ்வானா, லெபனான் நாடுகளை சேர்ந்த அழகிகள் முதல் 4 இடங்களை பிடித்தனர். இந்தியாவின் சீனி ஷெட்டி முதல் 4 இடங்களுக்குள் கூட வர முடியாமல் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

முடிவில் செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகி பட்டத்தை வென்றார். அவருக்கு உலக அழகி மகுடத்தை, 2021-ம் ஆண்டு பட்டம் வென்ற போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா சூட்டினார். 2-வது இடத்தை லெபனான் நாட்டை சேர்ந்த யாஸ்மீனா பிடித்தார்.

உலக அழகி மகுடத்தை வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவா உணர்ச்சி பொங்க கூறியதாவது: இந்த வெற்றிக்கான எனது பயணம் மிகவும் நீண்டது. இதற்காக பல தியாகங்களை செய்து இருக்கிறேன். பலருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். இங்கு நின்று எனது உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இது எனது நீண்ட நாள் கனவு. இந்த தளம் எனக்கு சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு உதவி செய்யவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory