» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் கமிட்டி அங்கீகாரம் ரத்து : உத்தரவை திரும்ப பெற்றது மத்திய அரசு!

புதன் 6, மார்ச் 2024 4:27:03 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறுவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் இந்திய மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதையும், டெல்லியில் மாற்றுத் திறனாளிகளுக்கான துப்பாக்கி சூடுதல் உலகக்கோப்பையை இந்திய மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கம் நடத்த உள்ளதையும் கருத்தில் கொண்டு, அந்த சங்கத்தின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறுவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory