» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை : பிரதமர் மோடி துவக்கி வைத்து பயணம்!

புதன் 6, மார்ச் 2024 11:27:31 AM (IST)



கொல்கத்தாவில்  நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்து மாணவர்களுடன் பயணம் செய்தார். 

மேற்கு வங்கத்தில் ரூ. 15,400 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார். இதையடுத்து கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் - எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஹூக்ளி ஆற்றில் 32 மீட்டர் ஆழத்தில் இதை உருவாக்கி உள்ளனர். சுமார் 520 மீட்டர் நீளத்திற்கு ஆற்றின் கீழ் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை 45 வினாடிகளில் மெட்ரோ ரயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் இந்த மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உரையாடியபடியே பயணம் மேற்கொண்டார். பள்ளி மாணவர்கள் பலரும் இந்த மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தினமும் 7 லட்சம் பயணிகள் இந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory