» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எல்லை மீறி பேசும் ஆ.ராசாவின் கருத்தை காங்., ஏற்கிறதா? அனுராக் தாக்கூர் கேள்வி

புதன் 6, மார்ச் 2024 10:53:58 AM (IST)

"இந்தியாவுக்கு எதிராகவும், இந்து மதத்துக்கு எதிராகவும் வெளிப்படையாக எல்லை மீறி பேசும் ஆ. ராசா சொல்வதை காங்கிரஸ் ஏற்கிறதா?" என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹாமிர்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் சனாதன தர்மத்தை அல்லது இந்துக்களை அல்லது ராமரை அவமதிக்கும் வகையில் பலமுறை பேசி இருக்கிறார்கள். மற்றொருபுறம் அவர்கள், நாட்டை துண்டாட வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்படும் சின்ன சின்ன குழுக்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். அவர்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாட பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுகிறார்கள்.

தற்போது, மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஒரு நபர்(ஆ. ராசா) எல்லை மீறி பேசி இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வெளிப்படையாக செயல்பட்டுக்கொண்டு சனாதன தர்மத்துக்கு எதிராக, ராமருக்கு எதிராக கருத்துக்களைக் கூறி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியை நான் கேட்கிறேன், அவரை யார் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஆ. ராசாவும், திமுகவும் சொல்வதை காங்கிரஸ் ஏற்கிறதா? காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டதை ஏற்கிறதா? இந்தியா ஒரு நாடு என காங்கிரஸ் கருதவில்லையா? தேர்தல் நெருங்கும் போது பிரித்தாளும் அரசியல் ஏன் தலைதூக்குகிறது? என கேள்வி எழுப்பி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory