» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இறைச்சிக்காக ஆய்வகத்தில் கடல்மீன்கள் வளர்ப்பு: இந்தியாவில் முதல் முறை!!

திங்கள் 29, ஜனவரி 2024 5:02:02 PM (IST)

நாட்டில் அதிகரித்து வரும் மீன் இறைச்சி பயன்பாட்டை கருத்திற்கொண்டு, கடல்மீன்களை ஆய்வகத்தில் வளர்க்கும் சோதனையில் மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.  

கடல்மீன்களின் உடலிலுள்ள குறிப்பிட்ட செல்கள் தனியாக பிரிக்கப்பட்டு, அவற்றை ஆய்வகத்தில் வளர்ககும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக,  செல்களில் இருந்து மீன்களை வளர்க்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் புத்தொழில் ஆராய்ச்சி நிறுவனமான ’நீட் மீட் பயோடெக்’ நிறுவனத்துடன்  மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்  கூட்டு ஆராய்ச்சி ஒப்பந்தம் செய்துள்ளது.

இயற்கையாக கிடைக்கும் கடல்மீன்களில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் சுவையுடன், ஆய்வகத்தில் வளர்க்கப்படும் மீன்களிலும் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். முதற்கட்டமாக வஞ்சரம் மற்றும் வவ்வால் ரக மீன்களை வளர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சிங்கப்பூர், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடல்வாழ் உயிரினங்களை ஆய்வகத்தில் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது இந்தியாவும் அத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆராய்ச்சி, உள்நாட்டில் கடல்வாழ் உயிரின இறைச்சி தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory