» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வட இந்திய மாநிலங்களில் கடும் பனிமூட்டம் : ஆறு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!

சனி 27, ஜனவரி 2024 5:20:20 PM (IST)

கடும் பனிமூட்டம் காரணமாக பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
 
கடும் பனி மூட்டம் காரணமாக வட மாநிலங்களில் ரயில், விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாட்டில், பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், உத்தர பிரதேசம், பிகார், ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்களிலும் ஜனவரி 28ஆம் தேதி வரை கடும் பனிமூட்டம் நிலவும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹிமாலயப் பகுதிகளில் ஜனவரி 30 வரை லேசான மழை அல்லது பனிமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. நாளை வரை வட இந்திய மாநிலங்களில் கடுங்குளிர் நிலவும் என்றும், அதன்பிறகு மெல்ல குளிரின் அளவு குறையத் தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுங்குளிருக்கு இடையே, புது தில்லியில் காற்றின் தரம் மோசமாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory