» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே காரணம்: ப.சிதம்பரம்

சனி 27, ஜனவரி 2024 12:31:37 PM (IST)

தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர்தான் காரணம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர், 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது; "1857-ல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாத நிலை உள்ளது. இதற்கு ஆளுநர்-அரசு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைதான் காரணம்.

தமிழகத்தில் ஆளுநரே பல சர்ச்சைகளின் மையமாக இருப்பது ஏன்? மேலும் அவர்தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என்றும் சிலர் கூறுகின்றனர். நாட்டின் உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான தகவல் இது." இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

மக்கள்Jan 31, 2024 - 09:31:23 AM | Posted IP 162.1*****

காமராஜருக்குப் பிறகு காங்கிரஸ் செத்து போச்சு , கிறுக்கு பப்பு ராகுல் சுத்திட்டு இருக்கு

PEOPLESJan 28, 2024 - 03:07:56 PM | Posted IP 172.7*****

திமுக இல்லாமல் தனியே போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது. இவர் பேச வந்துட்டார்.

sunnJan 27, 2024 - 05:49:00 PM | Posted IP 172.7*****

எல்லாம் தெரிந்த ஞானி சொல்லிட்டார் . காங்கிரஸ் ஆட்சியில் இவரால் தமிழ்நாட்டிற்கு ஒரு பிரயோஜனம் இல்லை, இவர் குடும்பத்திற்குத்தான் பிரயோஜனம். இப்போது கவர்னரை குறை சொல்லுகிறார். திமுகவிடம் அதிக தொகுதி கேட்பதற்காக அவர்களுக்கு ஜால்ரா போடுகிறார். திமுகவை நம்பித்தான் இவர்கள் இருக்கிறார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory