» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2500 வெள்ள : முதல்வர் அறிவிப்பு!

சனி 9, டிசம்பர் 2023 10:47:05 AM (IST)

ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோரப் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்தது.இதில் நெல்லூர், திருப்பதி, கிழக்கு கோதாவரி, பிரகாசம், என்.டி.ஆர். உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக் கணக்கான  ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது.

இந்நிலையில், முதல்-மந்திரி ஜெகன்மோகன் திருப்பதி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மின்சாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சீரான நிலை அடையும் வரை அரசு அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்கும். மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 நிவாரண தொகை உடனடியாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory