» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் கரையைக் கடந்தது மிக்ஜம் புயல்: 100 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கனமழை!

புதன் 6, டிசம்பர் 2023 10:13:43 AM (IST)

மிக்ஜம் புயல், ஆந்திரத்தின் பாபட்லா என்ற பகுதியில் நேற்று பிற்பகல் கரையைக் கடந்தது. அப்போது சுமார் 100 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழை கொட்டியது. 

"மிக்ஜம்' புயல் தாக்கத்தால் ஆந்திரத்தின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அந்த மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக வெள்ளநீர் சூழ்ந்தது; பல இடங்களில் சாலைகள் அரித்துச் செல்லப்பட்டன; ஏரிகளும் குளங்களும் நிரம்பி வழிந்தன; ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிர்கள் மழை நீரில் மூழ்கின.

இதனிடையே, புயல் பாதிப்பு தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புயலின் தாக்கம் மற்றும் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அவர் ஆய்வு நடத்தினார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடைபட்ட மின்சார விநியோகத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், உயிரிழப்புகள் அல்லது கால்நடைகள் இறந்தது தொடர்பாக தெரிய வந்தால் உரிய இழப்பீட்டை வழங்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு ரேஷனில் போதிய உணவு தானியங்களை விநியோகம் செய்யுமாறு முதல்வர் அறிவுறுத்தினார். உடனடி நிவாரண நடவடிக்கைகளுக்காக ரூ. 22 கோடியை ஆந்திர முதல்வர் ஒதுக்கீடு செய்தார். புயலால் பாதிக்கப்பட்டுள்ள பாபட்லா, குண்டூர், கிருஷ்ணா, என்.டி.ஆர்., சித்தூர், கடப்பா, விசாகப்பட்டினம், திருப்பதி உள்ளிட்ட மாவட்டங்களில் உதவி தொலைபேசி எண்களை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory