» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெலங்கானா சட்டப் பேரவை தேர்தல்: நடிகர்கள், பிரபலங்கள் ஓட்டுபோட்டனர்!

வியாழன் 30, நவம்பர் 2023 11:42:59 AM (IST)



தெலங்கானா சட்டப் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

தெலங்கானா சட்டப் பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை தொடங்கியது. 119 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இந்தத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி ஏறத்தாழ 8.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.மத்திய அமைச்சர் மற்றும் பாஜக மாநில தலைவர் ஜி.கிஷன் ரெட்டி, பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ், அவரது சகோதரி எம்எல்சி கவிதா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அஸாதுதீன் ஒவைஸி ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கியதுமே தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் மற்றும் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.தெலங்கானா முதல்வர் கேசிஆரின் மகளான கவிதா தனது வாக்கைப் பஞ்சாரா மலை தொகுதி வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்.

அவர், "தெலங்கானா மக்கள் அனைவரும் முன்வந்து வாக்களைப் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் வாக்குப் பதிவிட்டால்தான் எங்களைக் கேள்வி கேட்க முடியும். வாக்குப் பதிவு செய்தால், அரசியல்வாதிகளை பொறுப்போடு நடக்கச் செய்ய இயலும்” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தலைவர் கிஷன் ரெட்டி, வாக்குகளைப் பதிவு செய்யாமல் அரசியல் அமைப்பை விமர்சிக்க உரிமையில்லை. மக்கள் பணம், மது  ஆகியவற்றுக்கு விலை போகாமல் பயமில்லாமல் வாக்களிக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தங்கள் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் நாளில் வாக்குக் கேட்டதாகக் காங்கிரஸ் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory