» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:18:04 PM (IST)
தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை அக்.15 வரை திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. கடந்த செப். 18 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில்கூட தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் தங்களிடம் போதிய நீர் இருப்பு இல்லை என்று கூறி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை செயல்படுத்தக் கூறியது. கடந்த செப்.26ஆம் தேதி நடைபெற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்திலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று பிற்பகல் தொடங்கியது. இதில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 12,500 கனஅடி நீர் திறந்துவிடக் கோரிய நிலையில், தமிழகத்துக்கு அக்டோபர் 15 வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறந்துவிடப்படும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)










