» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உயர்மட்டக் குழு விசாரணைக்கு பிறகே ரயில் விபத்துக்கான காரணம் தெரிய வரும்: அஸ்வினி வைஷ்ணவ்

சனி 3, ஜூன் 2023 11:06:54 AM (IST)

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் உயர்மட்டக் குழு விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த ரயில் விபத்தை சனிக்கிழமை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  கோர விபத்தின் மீட்புப் பணிகள் சவாலாக உள்ளது. தற்போது, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண பணிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறோம். ரயில்வேத் துறை, மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படையின்ர், தீயணைப்பு வீரர்கள் குழு, தன்னார்வலர்கள், உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னரே ரயில்கள் விபத்துக்கான காரம் தெரிய வரும். ரயில் விபத்து குறித்து தன்னிச்சையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணை நடத்தப்படும். மீட்புப் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இக்கட்டான இந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.  

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ரயில் விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், சிறயளவில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory