» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆவணங்கள் இன்றி ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் : பொதுநல வழக்கு தள்ளுபடி

திங்கள் 29, மே 2023 11:53:37 AM (IST)

ஆவணங்கள் இன்றி ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் என்ற விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அண்மையில் அறிவித்தது. செப்டம்பா் 30-ஆம் தேதி வரை இந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தலாம் அல்லது சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது. தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்தது.

இதையடுத்து ஒரே சமயத்தில் ரூ.20,000 மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும், பொதுமக்கள் எந்த வித படிவத்தையோ, அடையாள ஆவணமோ தர வேண்டியதில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்தது. மேலும், மக்களுக்கு எந்தவித இடையூரும் இன்றி ரூ.2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பானப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் ஆவணங்கள் இன்றி ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் என்ற விதிமுறையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory