» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாத்மா காந்தி படித்து பட்டம் பெறவில்லை: ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சர்ச்சை பேச்சு!!

சனி 25, மார்ச் 2023 11:35:51 AM (IST)

மகாத்மா காந்தி எந்த பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெறவில்லை என்று ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் குவாலிய நகரில் நடைபெற்ற டாக்டர் ராம் மனோகர் லோகியா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய அவர்; தேசத்தந்தையாக பார்க்கப்படும் மகாத்மா காந்தி சட்டம் படித்து பட்டம் பெற்றவர் என்பது தவறான தகவல் என்று கூறினார். 

உயர்நிலை பள்ளி பட்டய படிப்பை மட்டுமே பயின்ற அவர் வழக்கறிஞராக பணியாற்றினார் என்றும் தெரிவித்துள்ளார். காந்தி பட்டப்படிப்பு முடிக்கவில்லை என தைரியமாக யாரும் கேள்வி எழுப்ப முடியுமா என்றும் மனோஜ் சின்கா வினவினார். ஆதாரம் எதுவும் இல்லாமல் மனோஜ் சின்கா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory