» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம் சண்டிகரில் துவங்கியது !

சனி 18, மார்ச் 2023 3:02:07 PM (IST)அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயற் குழு கூட்டம் பஞ்சாப் மாநி லத்தில் உள்ள சண்டிகரில் துவங்கியது.

அகில இந்திய பத்திரி கையாளர் சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகரில் பஞ்சாப் மாநில துணை சபாநாயகர் ஜெய் கிருஷ்ணாசிங்ரோடி அனை வருக்கும் காலைசிற்றுண்டி வழங்கி விழாவினை துவக்கி வைத்தார். அகில இந்திய தலைவர்கள் தோழர்கள் கே.ஸ்ரீநிவாஸ் ரெட்டி, பில்வந்தர்சிங் ஜம்மு, டி.அமர், எஸ்.என்.சின்ஹா உட்பட இந்தியா முழுவதும் இருந்து தலைவர்கள் கலந் து கொண்டனர்.
 
விழாவின் துவக்க உரையை பஞ்சாப் மாநில செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் சேட்டன் சிங் ஜடரஞ்சரா வழங்கினார். தமிழகத்தில் இருந்து டி.எஸ்.ஆர்.சுபாஷ், கு.வெங்கட்ராமன், கே.ரமேஷ்குமார், ஜெ.நிக்சன், இருதய ஞானரமேஷ், மஹா வீர்சந்த் ஜெயின், டாக்டர் சுப்பையா பாண்டியன், டாக்டர் தமிழரசி பாண்டியன் மற்றும் புதுச்சேரி சார்பில் எம்.பி.மதிமகா ராஜா, சட்ட ஆலோசகர் அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக, சமீபத்தில் மறைந்த தமிழகத்தைச் சேர்ந்த தேசிய குழு உறுப்பினர் மோகனன் ஆப்ரஹாமிற்கு அகில இந்திய சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory