» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை : டிக்கெட் பரிசோதகர் கைது!
திங்கள் 23, ஜனவரி 2023 11:54:44 AM (IST)
ஓடும் ரயிலில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதாகியுள்ள டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
டேராடூன்-சுபேதர்கஞ்ச் விரைவு ரயிலில் கே.என்.சிங் என்பவர் திங்கள்கிழமை (ஜன.16) டிக்கெட் பரிசேதகராக பணியில் இருந்துள்ளார். அப்போது அந்த ரயிலில் சந்தௌசியில் இருந்து பிரயாக்ராஜ் அருகே உள்ள சுபேதர்கஞ்ச் நோக்கி பயணித்து கொண்டிருந்த 33 வயது இளம்பெண் ஒருவருக்கு கே.என்.சிங் முதல்வகுப்பு ஏ.சி பெட்டியில் இருக்கை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
பின்னர், அந்த ரயில் உத்தரப்பிரதேசத்தில் அலிகார் அருகே சென்று கொண்டிருந்தபோது, இரவு 10 மணியளவில் சிங் மற்றும் மற்றொருவரால் வலுக்கட்டாயமாக அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஓடும் ரயிலில் நடந்த இந்த சம்பவம் குறித்து அந்த பெண் சந்தாசி ரயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் கே.என்.சிங்கை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இரண்டாவது குற்றவாளி தப்பியோடிவிட்டதாக உ.பி காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்போது, ரயில் பயண டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகரால் இளம்பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று ஜனவரி 15 ஆம் தேதி பெற்றோர் திட்டியதால், மஹோபா பகுதியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டிற்கு செல்வதற்காக தனது வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி தவறுதலாக எட்டாவா செல்லும் ரயிலில் ஏறியுள்ளார்.
பயணிகள் அனைவரும் எட்டாவாவில் ரயிலில் இருந்து இறங்கினர், ஆனால், சிறுமி அங்கேயே அமர்ந்திருந்தாள். பின்னர், ரயிலை சுத்தம் செய்ய வந்த பணியாளர் ரயிலில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ரயில்வே ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கர்நாடகத்தில் அரசு டாக்டர்கள் 'கிளினிக்' நடத்த தடை: மாநில அரசுக்கு பரிந்துரை!
சனி 4, பிப்ரவரி 2023 5:28:29 PM (IST)

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியல்: பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்
சனி 4, பிப்ரவரி 2023 3:47:20 PM (IST)

கர்நாடக தேர்தல்: பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்!
சனி 4, பிப்ரவரி 2023 12:37:49 PM (IST)

உளவுத்துறை இயக்குனர் வீட்டில் சிஆர்பிஎப் எஸ்.ஐ., துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சனி 4, பிப்ரவரி 2023 11:54:11 AM (IST)

கோவிலுக்கு முன்னால் மதுக்கடை : பா.ஜ.க. அரசுக்கு எதிராக உமா பாரதி நூதன போராட்டம்!
சனி 4, பிப்ரவரி 2023 10:22:17 AM (IST)
_1675421098.jpg)
அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:15:04 PM (IST)
