» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி! காங்கிரஸ் படுதோல்வி

புதன் 7, டிசம்பர் 2022 5:08:01 PM (IST)டெல்லி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 126 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இத்தேர்தலில் பாஜக 100+ இடங்களையும், காங் வெறும் 9 இடங்களையும் கைப்பற்றியது

டெல்லி மாநகராட்சியின் (எம்சிடி) 250 வாா்டுகளுக்கு கடந்த 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்ணும் 42 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே இழுபறி நீடித்து வந்தது. ஆனால், கடைசி சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய ஆம் ஆத்மி கட்சி வெற்றிக்கு தேவையான 126 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.  

இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மியிடம் பாஜக இழந்துள்ளது. பாஜக 100க்கும் அதிகமான இடங்களை வென்றது. ஆனால் காங் வெறும் 9 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory