» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பழைய நூறு ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும்: ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்

சனி 23, ஜனவரி 2021 5:47:28 PM (IST)

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய நூறு ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மங்களூருவில் மாவட்ட வங்கிகள் இடையேயான ஆலோசனை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் மகேஷ் பங்கேற்றார். 

அப்போது அவர் பேசியதாவது: பழைய ரூ.5, ரூ.10,ரூ.100 நோட்டுகள் பெறப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என தெரிவித்தார். பணமதிப்பிழப்புக்கு பிறகு 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஊதா நிற ரூ.100 நோட்டுகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். ரூ.10 நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகும், வர்த்தகர்கள் மற்றும் வணிகஸ்தர்கள் அந்த நாணயங்களை ஏற்கவில்லை, இது வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



Thalir Products



Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory