» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராகுல் காந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார் : பாஜக பதிலடி

சனி 7, டிசம்பர் 2019 5:21:47 PM (IST)

இந்தியாவை பெருமை மிகு நாடாக ராகுல் காந்தி என்றுமே எண்ணியதில்லை, அவர் மீண்டும் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவே பேசி வருகிறார் என பாஜக மூத்த தலைவர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்ட்டர் சம்பவத்துக்கு பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் சிலர் விமர்சித்துள்ளனர்.

இதுபோலவே உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்திற்கு வரும்போது 5 பேர் அவரை உயிரோடு எரித்தனர். இதில் பலத்த காயமடைந்த அந்தப்பெண், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் உயிரிழந்தார். அவர் முன்பு அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வரும் நிலையில் இதுபற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் வேதனை தெரிவித்துள்ளார்.

வயநாட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை நடப்பதில் உலகின் தலைநகராக இந்தியா உருவாகி விட்டது. தனது சொந்த மகளையும், சகோதரியையும் காப்பாற்ற முடியாத நிலை இந்தியாவில் ஏன் நீடிக்கிறது என உலக நாடுகள் கேள்வி எழுப்புகின்றன. உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த புகாருக்கு ஆளானார். ஆனால் அதுபற்றி பிரதமர் மோடி ஒருமுறை கூட வாய்திறக்கவில்லை’’ என ராகுல் காந்தி பேசினார்.

இந்தநிலையில் ராகுல் காந்திக்கு பாஜக பதிலளித்துள்ளது. துகுறித்து டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில் ‘‘உலகின் பாலியல் பலாத்கார தலைநகரம் இந்தியா என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை பெருமை மிகு நாடாக ராகுல் காந்தி என்றுமே எண்ணியதில்லை. அவர் மீண்டும் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவே பேசி வருகிறார். பிரதமர் மோடி குறித்த தவறான வார்த்தைகளை கூறினார். பின்னர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோாரினார்.’’ என மனோஜ் திவாரி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிDec 9, 2019 - 10:05:31 AM | Posted IP 173.2*****

மாடு, மாடு மூத்திரம் என்று பேசும் சங்கிகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களா அல்லது உண்மையை சொல்லும் ராகுல் மனநலம் பாதிக்கப்பட்டவரா?

சாமி 2Dec 8, 2019 - 10:08:42 AM | Posted IP 162.1*****

அவராவது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல தான் பேசுகிறார். ஆனால் நீங்கள் எல்லோரும் மனநலம் பாதித்தவர்கள் போலத்தான் பேசுகிறீர்கள்.

saamiDec 7, 2019 - 09:28:10 PM | Posted IP 162.1*****

well said Mr.Tiwari

முட்டா சாங்கி க்குDec 7, 2019 - 06:56:18 PM | Posted IP 162.1*****

அதை நிர்மலா செத்த ராமன் ஊறுகாய் மாமி கிட்டே சொல்லு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes



Anbu Communications






Thoothukudi Business Directory