» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் டிரம்பின் உதவியை நாடினாரா மோடி? இந்திய அரசு மறுப்பு

செவ்வாய் 23, ஜூலை 2019 3:28:47 PM (IST)

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும்படி இந்திய பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக டிரம்ப் கூறியதை மத்திய அரசு மறுத்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யும்படி இந்திய பிரதமர் மோடி கேட்டதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

"இரண்டு வாரங்களுக்கு முன் ஜப்பானில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தபோது காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய விருப்பமா? என்று கேட்டார். அப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக கூறினேன்” என டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால் அப்படி எந்த கோரிக்கையையும் டிரம்பிடம் பிரதமர் மோடி வைக்கவில்லை என இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க அதிபர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியை பார்த்தேன். இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி அப்படி எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. பாகிஸ்தானுடன் உள்ள பிரச்சினைகளை இரு நாடுகளும் தங்களுக்குள் மட்டுமே பேசி தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தின் அடிப்படையிலேயே பிரச்சினைக்கு தீர்வு இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory