» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நான் கழிவறையை சுத்தம் செய்ய வரவில்லை: தூய்மை திட்டத்தை விமர்சித்த பிரக்யாவுக்கு பாஜக சம்மன்

திங்கள் 22, ஜூலை 2019 5:43:03 PM (IST)

நான் கழிவறையை சுத்தம் செய்வதற்காக தேர்வு செய்யப்படவில்லை என சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த பாஜக எம்பி சாத்வி பிரக்யாவுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா சம்மன் அனுப்பியுள்ளார். 

பாஜகவில் சர்ச்சைகளுக்குப் பெயர்போன போபால் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சாத்வி பிரக்யா சிங் தாகுர் நேற்றும் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார்.  அவர் தெரிவித்ததாவது: நாங்கள் உங்களுடைய கழிவறையை சுத்தம் செய்வதற்காக தேர்வு செய்யப்படவில்லை. நாங்கள் எந்த வேலையை செய்ய வேண்டுமோ, எதைச் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறோமோ அதை நேர்மையாக செய்வோம். கடந்த காலங்களில் இதை கூறியிருக்கிறோம். அதைத்தான் இன்றும் தெரிவிக்கிறோம். வரும் காலங்களிலும் இதை தொடருவோம்.

இவருடைய இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவும், பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை கேலி செய்யும் வகையில் இந்த கருத்து அமைந்துள்ளது. இதையடுத்து, தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் ஆஜராகுமாறு சாத்வி பிரக்யாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரை சாத்வி பிரக்யா சந்தித்தார். அப்போது கட்சிக்கும், கட்சியின் சித்தாந்தத்துக்கும் எதிரான கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். இந்த சந்திப்புக்குப் பிறகு சாத்வி பிரக்யா செய்தியாளர்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory