» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோடிக்கும், அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணிய சுவாமி பேச்சு

ஞாயிறு 24, மார்ச் 2019 10:23:49 PM (IST)

பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேசியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில்,Annual kolkatta dialogue 2019 நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் பேசிய அவர், ”பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 6ஆவது இடத்தில் இருக்கிறது என்று மோடியும், ஜேட்லியும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து 3ஆவது இடத்தில் இந்தியா இருக்கின்றது, அது அவர்களுக்குத் தெரியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

”உலக அளவில் மக்களின் வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்டுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடவேண்டும். அவ்வாறு பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா 3ஆவது இடத்திலும் உள்ளன. ஆனால், ஏன் நமது பிரதமர் மோடி இந்தியா 6ஆவது இடத்தில் இருக்கிறது என்று சொல்கிறார். இது ஏன் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவருக்கும் பொருளாதாரம் தெரியாது. நிதியமைச்சருக்கும் பொருளாதாரம் தெரியாது.

அந்நிய செலாவணி அடிப்படையில் நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிடக்கூடாது. செலாவணி மதிப்பில் ஏற்றம் இறக்கம் இருப்பது இயல்பானது என்று விளக்கமாகக்கூறி மோடிக்குக் கடிதம் எழுதினேன். மோடி சொல்வதுபோல் செலாவணி மதிப்பில் கணக்கிட்டால்கூட இந்தியா 6ஆவது இடத்தில் இருக்காது, 7ஆவது இடத்தில்தான் இருக்கிறது. ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அளவை கணக்கிட சரியான வழி என்பது மக்களின் வாங்கும் சக்தியை வைத்துக் கணக்கிடுவதுதான். அந்த வகையில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் உலக அளவில் இந்தியா இருக்கிறது. காலனி ஆதிக்கத்துக்குப் பின் செழிப்பான நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது” என்று சுப்பிரமணிய சுவாமி பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications
Nalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory