» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இருபது வருடம் சேர்த்த பணத்தை சி.ஆர்.பி.எப்., குடும்பத்தாருக்கு கொடுத்த அரசு வழக்கறிஞர்

செவ்வாய் 19, பிப்ரவரி 2019 1:37:56 PM (IST)

ஆந்திரா அரசு வழக்கறிஞர் ஒருவர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தாருக்காக தான் 20 ஆண்டுகள் சேர்த்த இன்சூரன்ஸ் பணத்தை கொடுத்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 14ம் தேதி அன்று, புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதி, பயங்கரவாதிகள் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலானோர், தங்களால் முடிந்த உதவியை பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு வழங்கி வருகின்றனர். 
 
இந்நிலையில், ஆந்திரா அரசு வழக்கறிஞர் ஒருவர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தாருக்காக தான் 20 ஆண்டுகள் சேர்த்த இன்சூரன்ஸ் பணத்தை கொடுத்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த எஸ்.எஸ். வர்மா என்ற அரசு வழக்கறிஞர் கடந்த 1999ல் எல்.ஐ.சி.,யில் 20 ஆண்டுகள் பாலிசியில் சேர்ந்துள்ளார்.மாதம் ரூ. 2,200 பணம் செலுத்தி வந்த இவர், கடந்த 14ம் தேதி, எல்.ஐ.சி., பணமான ரூ. 64,100 பெற்றுள்ளார். அதே நாளில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த குடும்பத்தாருக்கு உதவியாக இந்த தொகையை வர்மா அளித்துள்ளார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest Cakes


CSC Computer Education


Thoothukudi Business Directory