» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரபாசுடன், ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையை இணைத்து கிசு கிசு : தெலுங்குதேசம் மீது புகார்!!

புதன் 16, ஜனவரி 2019 9:25:11 PM (IST)

பாகுபலி கதாநாயகன் பிரபாசுடன், ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையை இணைத்து கிசு கிசு செய்திகள் இணைய தளங்களில் உலா வருவது குறித்து தெலுங்குதேசம் கட்சி மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். 

ஆந்திராவில் முக்கிய எதிர்க்கட்சியாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இருந்து வருகிறது. இதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ‌ஷர்மிளாவும் தீவிர அரசியலில் இருந்து வருகிறார். அவருக்கு தற்போது 45 வயது ஆகிறது. இவரது கணவர் பெயர் அனில்குமார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ‌ஷர்மிளாவையும், பாகுபலி பட கதாநாயகன் பிரபாசையும் இணைத்து கிசு கிசு செய்திகள் இணைய தளங்களில் உலா வருகின்றன.

இது ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சியான தெலுங்தேசம் கட்சி தான் இந்த கிசு கிசுவை பரப்பி வருவதாக அவர்கள் கருதுகின்றனர். இது சம்பந்தமாக ‌ஷர்மிளா தனது கணவர் அணில்குமாருடன் சென்று ஐதராபாத் போலீஸ் கமி‌ஷனர் அஞ்சனிகுமாரை சந்தித்தார். அதில், தன்னைப்பற்றி தெலுங்குதேசம் கட்சியினர் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த சந்திப்புக்கு பின் வெளியே வந்த ‌ஷர்மிளா நிருபர்களிடம் கூறியதாவது: விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் எங்கள் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் என்னைப்பற்றி தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். 2014 பாராளுமன்ற தேர்தலின் போதும் இதேபோல வதந்திகளை பரப்பினார்கள். இப்போதும் அதேபோன்ற வதந்தி பரப்பப்படுகிறது.

இதன் பின்னணியில் தெலுங்குதேசம் கட்சி இருப்பதாக உறுதியாக கருதுகிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக போலீசில் புகார் கொடுத்துள்ளேன். நான் எனது கணவர், குழந்தைகளுடன் ஒரு தாயாக, மனைவியாக குடும்ப பிணைப்புடன் வாழ்ந்து வருகிறேன். ஆனால் சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு மோசமான வதந்தியை பரப்புகிறார்கள். நான் இதில் மவுனம் சாதித்தால் தவறான அர்த்தம் உருவாகி விடும். எனவே தான் புகார் கொடுத்தேன்என ஷர்மிளா கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Anbu CommunicationsThoothukudi Business Directory