» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டி அனைத்து கைகுலுக்கினார்!

வெள்ளி 20, ஜூலை 2018 3:40:09 PM (IST)



பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டி அனைத்து கைகுலுக்கினார்.

பாராளுமன்றத்தின் மக்களவையில் காலை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் பிரதமர் மோடியையும், பாரதீய ஜனதா அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இருதரப்பு இடையே மக்களவையில் பெரும் விவாதம் நடைபெற்றது.

ராகுலின் பேச்சு காரணமாக அமளி நேரிட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பேசிய ராகுல் காந்தி, அவை ஒத்திவைக்கப்பட்ட போது கிடைத்த நேரத்தில் உங்களுடைய எம்.பி.க்கள் (பா.ஜனதா தலைமையிலான கூட்டணி கட்சி எம்.பி.க்கள்)  சிறப்பாக பேசினீர்கள் என வாழ்த்து தெரிவித்தார்கள் என்று குறிப்பிட்டார். 

பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்த ராகுல் காந்தி வேகமாக பிரதமர் மோடி இருந்த பகுதியை நோக்கி சென்றார். அவர் எதிர்பார்க்காத நிலையில் அவரை கட்டி அனைத்து, கைகுலுக்கினார். பிரதமர் மோடியும் சிரித்துக்கொண்டு, அவரை மெல்ல தட்டினார். காரசாரமாக விவாதம் நேரிட்ட போது ராகுல் அன்பாக நெருங்கி சென்று பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. நீங்கள் என்னை பப்பு என்று அழைக்கலாம், ஆனால் நான் உங்களை வெறுக்க மாட்டேன் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியும் ராகுலை பாராட்டினார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Joseph Marketing


Anbu Communications

Nalam Pasumaiyagam


CSC Computer Education

New Shape Tailors




Thoothukudi Business Directory