ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது
பதிவு செய்த நாள் திங்கள் 5, ஜூன் 2017
நேரம் 8:37:10 PM (IST)

ஜி.சாட்-19 செயற்கைக் கோளை சுமந்து சென்ற, அதிக எடைகொண்ட, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சீறிப்பாய்ந்த இந்த ராக்கெட் ஜி.சாட்-19 செயற்கைக் கோளை வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தியது. இதன் மூலம் பவர் ராக்கெட்டை விண்ணுக்குச் செலுத்தும் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் ஆகியவற்றுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. பிரதமர் இந்த வெற்றிகரமான முயற்சிக்காக ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானிகளை பாராட்டியுள்ளார். இன்றைய தினம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று ஐஎஸ்ஆர்ஓ சேர்மன் ஏ.எஸ். கிரண் குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.Thoothukudi Business Directory