சென்னை 28ன் 2ம்பாகம் பூஜை ஸ்டில்ஸ்

சென்னை 28ன் 2ம்பாகம் பூஜை ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் திங்கள் 4, ஏப்ரல் 2016
நேரம் 8:24:30 PM (IST)

2007-ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 படத்தின் 2-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 திரைப்படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றத்துடன்,அவருக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் தேடித் தந்தது.தொடர்ந்து சரோஜா, மங்காத்தா உள்ளிட்ட வெற்றிப் படங்களை வெங்கட்பிரபு இயக்கினார். தற்போது சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டுள்ளது. வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் ஜெய், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா உள்ளிட்டோருடன், வைபவ்வும் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இரண்டாம் பாகத்துக்கும் இசையமைக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு படக்குழுவுடன் இருக்கும் புகைப்படத்தோடு தகவலை பகிர்ந்துள்ளார்.Thoothukudi Business Directory