மனோரமா மறைவு - சோகத்தில் திரையுலகம்

மனோரமா மறைவு - சோகத்தில் திரையுலகம்
பதிவு செய்த நாள் ஞாயிறு 11, அக்டோபர் 2015
நேரம் 6:43:52 PM (IST)

உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமான பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமாவின் உடலுக்கு திரையுலக பிரபலங்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதி, மனோரமாவின் உடலுக்கு நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் ஜெ.அன்பழகன், எ.வ.வேலு, டி.ஆர்.பாலு ஆகியோரும் வந்திருந்தனர். முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் விஜய்யும் மனோரமாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் ரஜினி, நிழல்கள் ரவி, பார்த்திபன், சச்சு, டி.ராஜேந்தர், கோவை சரளா, தனுஷ், ராகவா லாரன்ஸ், இயக்குனர் பாலா, ராதாரவி. சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.Thoothukudi Business Directory