பதிவு செய்த நாள் | செவ்வாய் 16, மார்ச் 2010 |
---|---|
நேரம் | 8:29:37 PM (IST) |
தூத்துக்குடி ஆன்லைன் இனையதளத்தின் 2ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தின் செய்திகள், தமிழகம் மற்றும் தேசிய செய்திகைளயும், பொதுமக்களுக்கு தேவையான பொது அறிவிற்கான பல்வேறு அம்சங்களையும் தாங்கிய ஒரு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு மாநில சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. தூத்துக்குடி ஆன்லைன் இனையதளத்தின், 2ம் ஆண்டு துவக்கவிழா இன்று பல்வேறு சமுதாயப் பணிகளுடன் எளிமையாக தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரையன்ட் நகரில் உள்ள நல்லாயன் செவித்திறன் அற்றோர் இல்லம் மற்றும் நேசக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.