திருநெல்வேலி மாவட்ட குடியரசு தினவிழா
பதிவு செய்த நாள் | செவ்வாய் 26, ஜனவரி 2010 |
---|---|
நேரம் | 4:32:19 PM (IST) |
குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாளை. வ.உ.சி., மைதானத்தில் இன்று காலை 8 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் தேசியக் கொடியேற்றி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, சுதந்திரப் போராட்ட வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர். சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம் வழங்கப்பட்டது. போலீஸ், என்.சி.சி., அணிவகுப்பு, பள்ளி மாணவ, மாணவிகள் கலை மற்றும் சாகச நிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.