தூத்துக்குடியில் சிவன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

தூத்துக்குடியில் சிவன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
பதிவு செய்த நாள் செவ்வாய் 23, ஏப்ரல் 2024
நேரம் 3:31:31 PM (IST)

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தேரோட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேருக்கு முன்பாக ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், தப்பாட்டம், சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், மகளிர் கோலாட்டம் மற்றும் தேவார இன்னிசையுடன் வேதபாராயணம் பாட, சிலம்பாட்டம் வானவேடிக்கையுடன் மாணவ, மாணவியரின் வீர விளையாட்டுகளுடன் தேரோட்டம் நடந்தது.Thoothukudi Business Directory