சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் : தூத்துக்குடியில் கோலாகலம்

சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் : தூத்துக்குடியில் கோலாகலம்
பதிவு செய்த நாள் சனி 16, ஏப்ரல் 2022
நேரம் 4:27:01 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் 2ஆண்டுகளுக்கு பின்னர் இன்று பக்தர்கள் பங்கேற்புடன் நடந்தது. ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், உறுமிமேளம், தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. தொண்டர்களின் சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், மகளிர் கோலாட்டம் மற்றும் தேவார இன்னிசையுடன் வேதபாராயணம் பாட, சிலம்பாட்டம் மாணவ, மாணவியரின் வீர விளையாட்டுகளுடன் வெகு விமரிசையாக தேரோட்டம் நடந்தது.Thoothukudi Business Directory