பதிவு செய்த நாள் | சனி 27, ஏப்ரல் 2013 |
---|---|
நேரம் | 2:00:41 PM (IST) |
தூத்துக்குடியில் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு முத்துநகர் கடற்கரை உருவாக்கப்பட்டது. இந்த கடற்கரை பூங்கா ரூ.1 கோடியே 88 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. இதில் ரூ.1 கோடி தன்னிறைவு திட்டத்தின் மூலமும், ரூ.50 லட்சம் வ.உ.சி.துறைமுக பொறுப்புக்கழகம் மூலமும் செலவிடப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில் ரூ.30 லட்சம் செலவில் ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கம், ரூ.8 லட்சம் செலவில் பீச் வாலிபால் விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 50 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய நீச்சல் குளத்தை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும், வ.உ.சி.துறைமுக பொறுப்புக்கழகமும் இணைந்து அமைத்துள்ளது. இதன் நுழைவுவாயில் பகுதியில் மீன் வடிவிலான ஆர்ச் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா திறப்பு விழா இன்று காலை நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் முன்னிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்தார். எஸ்பி. ராஜேந்திரன் சிற்றுண்டி விடுதியையும், வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் நடராஜன் நடைமேடையையும் திறந்து வைத்தார்.