» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி; அனைவருக்கும் வாஷிங்மெஷின் : அதிமுக தேர்தல் வாக்குறுதி

ஞாயிறு 14, மார்ச் 2021 6:45:12 PM (IST)வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்; அனைவருக்கும் அம்மா வாஷிங்மிஷின்; ஆண்டிற்கு 6 சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக இன்று (மார்ச் 14) மாலை 6 மணிக்கு வெளியிட்டனர். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தேர்தல் அறிக்கையை இருவரும் வெளியிட்ட பின்னர், அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தேர்தல் அறிக்கையினை வாசித்தார்.

அதிமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,500 வழங்கப்படும்.

அனைவருக்கும் வீடு வழங்கும் வகையில் அம்மா இல்லம் திட்டம்.

மகளிர் நலம் காக்கும் குலவிளக்குத் திட்டம்.

மகளிருக்கு பேருந்து சலுகை.

ரேஷன் பொருள்கள் வீடு தேடிவந்து கொடுக்கப்படும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டிற்கு 6 சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும்.

அம்மா துணி துவைக்கும் இயந்திரம் வழங்கும் திட்டம்.

கல்லூரி மாணாக்கர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி இலவச டேட்டா

வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்

முதியோருக்கான ஊதியத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 -ஆக உயர்வு

மத்திய அரசு பணிக்கு மாநில அளவிலான தேர்வு

தமிழ் மொழிப்பாடம் கட்டாயமாக்கப்படும்

உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் கொண்டுவரப்படும்

ஈழத்தமிழர் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவர்

ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மூலம் நிரந்தரதீர்வு

காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும்மின் இணைப்பு

வேளாண் விளை பொருள் லாபகரமான விற்பனைக்கு வழிகாட்டும் அமைப்பு

பனைமரம் வளர்ப்பு; ஒருங்கிணைந்த குளிர்சாதனக் கிடங்கு

நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்

நம்மாழ்வார் பெயரில் வேளாண்மைப் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்


மக்கள் கருத்து

BalaMar 15, 2021 - 11:45:11 AM | Posted IP 108.1*****

எல்லாத்தையும் தனியார் மயமாகி, வட மாநிலத்தவருக்கு வேலை வாய்ப்பு வழங்கி விட்டு எந்த வீட்ல யாருக்கு அரசு பனி...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Thalir Products
Thoothukudi Business Directory