» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட பிப்.17 முதல் விருப்ப மனு அளிக்கலாம் - திமுக அறிவிப்பு

செவ்வாய் 16, பிப்ரவரி 2021 5:03:57 PM (IST)

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட பிப்ரவரி 17 முதல் 24 வரை விருப்ப மனு அளிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையின் பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழ்நாடு சட்டசபைக்கு  தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தமிழ்நாடுடன் சேர்த்து, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியிலும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்க பணிகளிலும் ஈடுபட்டுள்ளன.

திமுக அறிவிப்பு

2021 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், திமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் 17-02-2021 முதல் 24-02-2021 வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.தமிழ்நாடு, புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம்

பொதுத் தொகுதி  :  ரூ. 25,000

மகளிர்க்கும் மற்றும்  தனித் தொகுதிக்கும் :   ரூ. 15,000

விண்ணப்ப படிவம் தலைமைக் கழகத்தில் ரூ. 1000 வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thalir ProductsThoothukudi Business Directory