» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி
வியாழன் 11, பிப்ரவரி 2021 4:20:51 PM (IST)
கரோனா காரணமாக தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.

புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த தேர்தலில் திட்டமிட்டுள்ளோம். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. வாக்குப்பதிவு முடிந்த 2 நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு தொடர்பாக கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன.80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பது குறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டது.
கரோனா காரணமாக தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும். தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக துணை ராணுவம் அனுப்பவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தேர்தல் பார்வையாளர்களாக பிற மாநில அதிகாரிகளை நியமிக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு மையங்கள் 68,000யில் இருந்து 93,000 உயர்த்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். சிறப்பு பார்வையாளர்களாக 2பேர் நியமிக்கப்படுவர் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் அமைதியாக முடிந்தது சட்டசபை தேர்தல்: 72 சதவீதம் வாக்குப்பதிவு
புதன் 7, ஏப்ரல் 2021 11:41:50 AM (IST)

வேட்பாளர்களுக்கு கரோனா பரிசோதனையைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி
செவ்வாய் 30, மார்ச் 2021 4:21:14 PM (IST)

கொள்ளையடிப்பதற்காக ஆட்சிக்கு வரத் துடிக்கறார்கள்: திமுக மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கு!!
திங்கள் 22, மார்ச் 2021 11:55:23 AM (IST)

கரோனா காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதில்
புதன் 17, மார்ச் 2021 5:17:03 PM (IST)

மு.க.ஸ்டாலின், சீமான், கமல்ஹாசன் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களின் சொத்து மதிப்பு!!
செவ்வாய் 16, மார்ச் 2021 3:48:50 PM (IST)

வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி; அனைவருக்கும் வாஷிங்மெஷின் : அதிமுக தேர்தல் வாக்குறுதி
ஞாயிறு 14, மார்ச் 2021 6:45:12 PM (IST)
