» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

புதுவையில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பஞ்சாயத்து தேர்தல் நடத்தவில்லை: பிரதமர் அதிருப்தி

சனி 26, டிசம்பர் 2020 4:54:36 PM (IST)

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், புதுச்சேரியில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை என பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் ஜெய் செஹத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் வாக்களித்துள்ளனர். மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் வெளியே வந்து வளர்ச்சிக்கு வாக்களித்தனர். 

மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ய பார்வையை ஜம்மு-காஷ்மீர் வென்றுள்ளது. புதுச்சேரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகும், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் எடுப்பவர்கள்தான் புதுச்சேரியில் அரசாங்கம் நடத்துகின்றனர். எல்லைப்பகுதிகளில் நடக்கும் தாக்குதல் எப்போதும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. சம்பா, பூஞ்ச், கத்துவா உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் பதுங்கு குழிகளை நிர்மாணிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam
Thalir ProductsThoothukudi Business Directory