» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

செய்துங்கநல்லூர் பள்ளியில் ஹிரோஷிமா தினம்

புதன் 7, ஆகஸ்ட் 2024 12:50:05 PM (IST)



செய்துங்கநல்லூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் ஹிரோஷிமா தினம் கடைபிடிக்கப்பட்டது. 

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் ஹிரோஷிமா தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தலைமை ஆசிரியர் அருட்சகோ. ஜெபமாலை பேசினார். 

"உலகினை அழிக்கும் யுத்தமே வேண்டாம் வேண்டும் சமாதானம் என குழந்தைகள் பாடலை பாடினர். அறிவியல் தூதன் முத்துசாமி வன்னியப்பன் ஹிரோஷிமா நினைவு தின சடகோ கொக்கு செய்து காட்டினார். பின் அறிவியல் மன்றம் சார்பில் மாணவர்களுக்கு டெலஸ்கோப் மூலம் தொலைவில் உள்ள காட்சிகள் காண்பிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியர் மைக்கேல் அருளானந்தம் நன்றியுரை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory