» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் மாணவர் சங்கப் பேரவைப் பதவியேற்பு விழா
சனி 6, ஜூலை 2024 4:01:38 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் சங்கப் பேரவைப் பதவியேற்பு விழா நடைபெற்றது.
முன்னதாக கல்லூரி ஆலயத்தில் அருட்தந்தை மரிய அரசு தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதன்பின் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் செயலர் ஷிபானா, முதல்வர் ஜெஸ்ஸி பர்னான்டோ, துணை முதல்வர் எழிலரசி, சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஜோஸ்பின் ஜெயராணி, தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் ரீத்தா, மரியின் ஊழியர் சபையின் இல்லத் தலைவி தெரசா மற்றும் மாணவர் சங்கப் பேரவைத் தலைவர் ஜெனட் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தூத்துக்குடி மறைமாவட்ட சமூக ஊடக ஒருங்கிணைப்பாளரும், இனிகோ அச்சகம் மற்றும் மாதா தொலைக்காட்சி இவற்றின் இயக்குனருமான அருட்தந்தை கிருபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அர்ப்பணிப்பு இரக்கம் உணர்வுகளை உள்ளடக்கிய நேர்மையான வாழ்வு வாழ வேண்டும் என்று சிறப்புரை வழங்கினார்.
மாணவர் சங்கப் பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவியர்கள் பதவி ஏற்றனர். கல்லூரியின் அனைத்து துறைகள் சங்கங்கள் மற்றும் மன்றங்கள் இவற்றின் பிரதிநிதிகள் தங்கள் திட்ட அறிக்கையினை சமர்ப்பித்தனர். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:44:57 AM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி
சனி 24, மே 2025 4:00:22 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)

10ம் வகுப்பு பொதுத் தேர்வு: கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் பள்ளி 100% தேர்ச்சி
ஞாயிறு 18, மே 2025 12:03:23 PM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கான கோடை கால சிறப்பு முகாம்!
சனி 17, மே 2025 3:15:10 PM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா!
வெள்ளி 9, மே 2025 4:46:16 PM (IST)
